வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் நான்கைந்து மாதங்களுக்கு முன்பு படிப்படியாக தியேட்டர்கள் மூடப்பட்டன. அதன்பின் கடந்த சில வாரங்களில் சில மாநிலங்களில் தியேட்டர்களைத் திறக்க அடுத்தடுத்து அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் இந்திய சினிமாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிராவில் இதுவரையிலும் தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.
திரையுலகத்தினர் பல முறை வேண்டுகோள் விடுத்தும் மாநில அரசு அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்திய மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் சங்கத்தினர் இதற்கு முன்பும் சில முறை கோரிக்கை வைத்தனர். தற்போது மீண்டும் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதில், “ஒவ்வொரு மாதமும் சுமார் 400 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில் மகாராஷ்டிரா தியேட்டர்கள் துறை மார்ச் 2020 முதல் தற்போது வரை சராசரியாக 4800 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது. மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 1000 தியேட்டர்களில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் இந்த லாக்டவுன் மூலம் கடும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர். கொரோனா காலத்தில் தியேட்டர்கள்தான் முதலில் மூடப்பட்டன. திறப்பதிலும் அதுதான் கடைசியாக உள்ளது.
மால்கள், விமான,, ரயில்வே சேவைகள், சில்லறை நிறுவனங்கள், ரெஸ்ட்டாரென்டுகள், ஜிம்கள் மற்றும் பல ஏற்கெனவே ஆரம்பமாகி நடந்து வருகின்றன. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட லோக்கல் ரயில் சேவைகள், பார்க்குகள், பீச்கள் ஆகியவை அரசு கட்டுப்பாட்டின்படி செயல்பட ஆரம்பித்துள்ளன.
தியேட்டர்களில் முழு சுகாதாரம், கட்டுப்பாடு ஆகிய வழிமுறைகளை சிறப்பாக செயல்படுத்த முடியும். நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுவிட்டன. ஆனால், மகாராஷ்டிராவில் மட்டும் தான் இன்னும் திரைப்படத் துறை முழுமையாக செயல்பட முடியாமல் உள்ளது, தியேட்டர்களும் திறக்கப்படாமல் உள்ளது. எனவே, மகாராஷ்டிரா அரசு சினிமா தியேட்டர்களில் பணி புரிபவர்களுக்கு அவசரமாக தடுப்பூசி வசதியை செய்து கொடுத்து, சீக்கிரமே தியேட்டர்களைத் திறக்க அனுமதி வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்,” என அவர்களது கோரிக்கையில் தெரிவித்துள்ளனர்.