மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ஷங்கர் இயக்கத்தில், ஏஆர்.ரகுமான் இசையமைப்பில், அர்ஜுன், மனிஷா கொய்ராலா, ரகுவரன், மணிவண்ணன், வடிவேலு மற்றும் பலர் நடித்து 1999ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'முதல்வன்'.
இப்படத்தை ஹிந்தியில் ஷங்கர் இயக்க, ஏஆர் ரகுமான் இசையமைக்க, அனில்கபூர், ராணி முகர்ஜி நடிக்க 'நாயக்' என்ற பெயரில் ரீமேக் செய்து 2011ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியிட்டார்கள். இன்றுடன் இப்படம் வெளிவந்து 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.
ஹிந்தியில் இந்தப் படத்திற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை, வியாபார ரீதியாக தோல்வியைத்தான் தழுவியது. இப்படம் இன்று 20வது ஆண்டை நிறைவு செய்ததை முன்னிட்டு படத்தின் நாயகன் அனில் கபூர் டுவிட்டரில், “20 வருடங்களுக்கு முன்னால் நான் ஒரு நாள் முதல்வராக ரீல் வாழ்க்கையில் இருந்தேன், மற்றவை வரலாறு. 'நாயக்' படத்தில் நான் நடிப்பதற்கு பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறினர். ஆனால், நான் இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று இருந்தேன், அதன் கருத்தின் மீது நம்பிக்கை வைத்தேன். இப்போது 'நாயக்' படத்தின் 20வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்,” என்று பதிவிட்டுள்ளார்.
அந்த ஒரு படத்திற்குப் பிறகு தமிழைத் தவிர வேறு எந்த மொழியிலும் ஷங்கர் படங்களை இயக்கவில்லை. 20 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு, தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளில் ஷங்கர் இயக்க, ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் படம் நாளை ஹைதராபாத்தில் ஆரம்பமாக உள்ளது.