'பாகுபலி தி எபிக்' படத்தின் டீசர் ஆகஸ்ட் 14ல் வெளியாகிறது! | ''வீட்ல நான் காலில் விழணும்'': அஜித் | காதல் கிசுகிசு எதிரொலி: கிரிக்கெட் வீரர் முகமது சிராஜிக்கு ராக்கி கட்டிய பாடகி ஜனாய் போஸ்லே! | 175 கோடியை கடந்த முதல் இந்திய அனிமேஷன் படம் மகாஅவதார் நரசிம்மா! | சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' |
படம் : காதல் கொண்டேன்
வெளியான ஆண்டு: 2003
நடிகர்கள்: தனுஷ், சோனியா அகர்வால், நாகேஷ்
இயக்கம்: செல்வராகவன்
தயாரிப்பு: கே விமலா கீதா
தன் வழி தனி வழி என தமிழ் சினிமாவில் பயணிக்கும் இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். தம்பி தனுஷ் நடித்த, துள்ளுவதோ இளமை படத்தில், கதை ஆசிரியராக பணியாற்றினார். இப்படத்தை, அவர்களின் தந்தை, கஸ்துாரி ராஜா இயக்கியதாக கூறப்பட்டாலும், அதில் செல்வராகவனின், டச் இருந்தது.
நோஞ்சான் உடம்புடைய தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை வெற்றிக்கு காரணம், படத்தில் இருந்த ஆபாச காட்சிகள் என, அப்போது விமர்சிக்கப்பட்டன. அதன் பின், தனுஷை வைத்து, 2003ல், செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படம், இருவருக்கும் மிகப்பெரிய வரவேற்பைக் கொடுத்தது. அதன்பின், இருவரும் தமிழ் சினிமாவில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
கடந்த, 1996ல் வெளிவந்த ஹாலிவுட் படமான பியர் படத்தை தழுவி, இப்படம் உருவாக்கப்பட்டது. ரொமான்டிக் சைக்கோ த்ரில்லர் வகையை சேர்ந்தது. தமிழ் சினிமா கையாண்டு வந்த கதாநாயக பிம்பத்தை, உடைத்தெறிவது, செல்வராகவனின் வழக்கம். மன நலம் பாதிக்கப்பட்டவன், பஸ்சில் செருப்படி வாங்கியவன், பணத்திற்காக வேலை செய்யும் கூலி என, நம் முன் திரிந்த நபர்களின் சாயல்களில், கதாநாயகனை உருவாக்கி இருப்பார்.
ஒரு ஆதரவற்ற இளைஞனின் மனம், ஒரு பெண்ணின் அன்பை அனுபவிக்கத் துவங்கும்போது, அது கைநழுவும் சந்தர்ப்பத்தை எப்படி எதிர்கொள்கிறான் என்ற உளவியலை, நேர்த்தியாகப் பேசியிருந்தது, காதல் கொண்டேன்.
முகத்தில் தாடியுடனும், புட்டிக் கண்ணாடியுடனும் தனுஷ், திவ்யா... திவ்யா... என்று போட்ட ஆட்டம், தமிழகத்தை அதிரச் செய்தது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் யுவன் சங்கர் ராஜாவின் இசை. தேவதையை கண்டேன், மனசு ரெண்டும், தொட்டு தொட்டு போகும், நெஞ்சோடு, காதல் காதல்... பாடல்கள், தமிழகத்தையே உலுக்கியது எனலாம். இப்படம் தெலுங்கு, கன்னடா, பெங்காலி மொழிகளில், ரீமேக் செய்யப்பட்டது.
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!காதல் கொண்டேன்