கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? | ‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம் | திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு இபிஎஸ், உதயநிதி, பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து |
படம் : சாமி
வெளியான ஆண்டு : 2003
நடிகர்கள் : விக்ரம், த்ரிஷா, விவேக், கோட்டா சீனிவாச ராவ்
இயக்கம் : ஹரி
தயாரிப்பு : கவிதாலயா
'நான் போலீஸ் இல்லை; பொறுக்கி' என, விக்ரம் சொல்லி அடிச்ச படம், சாமி. தனக்கு முதல் படம் இயக்க வாய்ப்பு கொடுத்த கவிதாலயாவுடன், இயக்குனர் ஹரி, மீண்டும் இணைந்த படம், சாமி.
'ஒரு நல்ல போலீஸ்காரன், லஞ்சம் வாங்குறான்; லஞ்சம் வாங்கறவன் எப்படி நல்ல போலீஸ்காரனா இருக்க முடியும்?' இது தான் படத்தின், 'ஒன்லைன்' கதை. முறைப்பும், விரைப்புமாக விக்ரம், 'கிங் மேக்கர்' பெருமாள் பிச்சையை எப்படி அழிக்கிறார் என்ற கதைக்கு, பரபரப்பான, சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து, ஹரி கெத்து காட்டியிருந்தார். படத்தின் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படவில்லை.
சாமி விக்ரமுக்கு ஏற்ற மாமியாக த்ரிஷா, ரொமான்ஸ் காட்சிகளில், ரசிகர்களை ஜொள்ளு வடிய செய்தார். படத்தின் பலமே, பெருமாள் பிச்சை என்ற வில்லனாக நடித்த கோட்டா சீனிவாச ராவும், அவருக்கு பின்னணி குரல் கொடுத்த ராஜேந்திரனும் தான். பகுத்தறிவுடைய வெங்கட்ராமன் அய்யராக, விவேக் செய்த காமெடி, படத்தின் சீரியஸ் தன்மைக்கு, 'ரிலாக்ஸ்' கொடுத்தது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், 'திருநெல்வேலி அல்வா, இது தானா, கல்யாணம் தான் கட்டிக்கிட்டு, புடிச்சிருக்கு, வேப்பமரம்...' பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.
'பாக்ஸ் ஆபிஸில்' மிகப் பெரிய வெற்றியை பெற்ற சாமி, தெலுங்கில், லட்சுமி நரசிம்மா; பெங்காலியில், பரூட்; கன்னடத்தில், அய்யா; ஹிந்தியில், போலிஸ்கிரி என்ற தலைப்புகளில், 'ரீமேக்' செய்யப்பட்டது.
படத்தின் முடிவில், 'சாமியின் வேட்டை தொடரும்'னு கார்ட் போட்டிருந்தனர். அதன் படி இரண்டாம் பாகம் வெளியானது. சாமி வேட்டைக்கு போகாமல் இருந்திருக்கலாம் என, நினைக்க செய்தது.
அதர்மத்திற்கு எதிராக அடிச்சு துவம்சம் செய்தது, சாமி!