கவுரவ டாக்டர் பட்டம்: அட்லிக்கு வாழ்த்து சொன்ன அல்லு அர்ஜுன் | குடியிருந்த கோயில், அவ்வை சண்முகி, போர் தொழில் - ஞாயிறு திரைப்படங்கள் | திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் |
தெலுங்கு திரையுலகிற்கு ஒரு தமன் போல மலையாள திரையுலகில் இசையமைப்பாளர் கோபி சுந்தர் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார். தமிழில் தோழா, பெங்களூரு நாட்கள் ஆகிய படங்களுக்கு இசையமைத்த இவர், தற்போது தெலுங்கில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள 'மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்' படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்தப்படத்தின் சக்சஸ் மீட் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் அல்லு அர்ஜுன். இந்தப்படத்தில் கோபிசுந்தர் இசையமைத்த 'லேஹெராயி' என்கிற பாடல் தனக்கு பிடித்த பாடல் என்று கூறிய அல்லு அர்ஜுன் தினசரி காரில் பயணிக்கும்போது கோபிசுந்தரின் இசையில் உருவான பல பாடல்களை தான் கேட்பதாகவும் கூறினார். அதுமட்டுமல்ல தனது படத்திற்கும் கோபிசுந்தர் இசையமைக்க வேண்டும் என அழைப்பும் விடுத்து கோபிசுந்தரை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் அல்லு அர்ஜுன்.