தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
மலையாள சினிமாவை பொருத்தவரை நடிகர் திலீப் மட்டும் வித்தியாசமான கதாபாத்திரங்களையும், விதவிதமான கெட்டப்புகளையும் விரும்பி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது தனது நண்பர் நாதிர்ஷா டைரக்ஷனில் கேசு இ வீட்டின்டே நாதன் என்கிற படத்தில் நடித்துள்ளார் திலீப்..
இந்த படத்தில் அரசுவேலையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தைச் சேர்ந்த 60 வயதான முதியவராக நடித்திருக்கிறார் திலீப். இவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஊர்வசி.. தற்போது கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு செயல்பட துவங்கி இருந்தாலும் இந்தப்படத்தை தியேட்டரில் வெளியிட தயாரிப்பாளர் தயக்கம் காட்டியுள்ளார்.
காரணம் திலீப் வயதான மனிதராக நடித்துள்ளதால், இந்தப்படத்தை தியேட்டருக்கு வந்து அதிக அளவிலான ரசிகர்கள் ரசிப்பார்களா என்கிற சந்தேகம் தயாரிப்பாளருக்கு எழுந்துள்ளதாம். அதனால் இந்தப்படத்தை நேரடியாக ஒடிடியிலேயே வெளியிட முடிவு செய்துள்ளார்கள். டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தப்படத்தை வரும் டிச-24ஆம் தேதி வெளியிடுகிறது.