டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி வரும் மலையாளப் படம் ஆடுஜீவிதம். புகழ்பெற்ற எழுத்தாளர் பென்யாமினின் நாவலை அதே தலைப்பில் படமாக்குகிறார்கள். அமலாபால், லட்சுமி சர்மா, லீனா, அபர்ணா பாலமுரளி, வினித் சீனிவாசன் உள்பட பலர் நடிக்கிறார்கள். கே.யு.மோகனன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தின் பெரும்பகுதி கதைக்களம் அரேபிய பாலைவனத்தில் நடக்கிறது. அங்கு படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்காததால் அல்ஜீரியா மற்றும் ஜோர்டான் பாலைவனத்தில் படமாக்கப்பட்டது. அப்போது திடீர் கொரோனா ஊரடங்கு உலகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டதால் பிருத்விராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அல்ஜீரியாவில் மாட்டிக் கொண்டனர். பின்னர் இந்திய அரசின் உதவியுடன் தனி விமானத்தில் நாடு திரும்பினார்கள்.
இந்த நிலையில் படப்பிடிப்பை மீண்டும் அல்ஜீரியா மற்றும் ஜோர்டானில் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். மார்ச் மாதத்தில் இருந்து 4வது கட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இயக்குனர் பிளெஸ்ஸி மற்றும் அவரது குழுவினர் பிப்ரவரி 15ம் தேதி ஜோர்டானுக்கு செல்கிறார்கள். பிருத்விராஜ் மார்ச் முதல் வாரம் செல்வார் என்று தெரிகிறது.