இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை | தமிழில் ஒரு ரவுண்ட் வருவாரா கெட்டிகா ஷர்மா... | தெலுங்கு சினிமா ஸ்டிரைக்: பஞ்சாயத்தில் சிரஞ்சீவி | பிளாஷ்பேக் : 250வது படத்தில் சிவாஜிக்கு ஏவிஎம் செய்த மரியாதை | பிளாஷ்பேக் : தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடந்த முதல் தமிழ் படம் | நடிகர் சங்கத்தில் இருந்து விலகியவர்கள் திரும்ப வேண்டும் : தலைவி ஸ்வேதா மேனன் வேண்டுகோள் | ஆணவ கொலை பின்னணியில் உருவாகும் 'நெல்லை பாய்ஸ்' | நெகட்டிவ் விமர்சனங்கள் கூலி வசூலை பாதிக்கிறதா? |
சென்னை: சினிமாவில் இருப்பவர்களே சினிமாவுக்கு ஆபத்தாக இருப்பதாகவும், சுயநலமாக இருந்துக்கொண்டு சினிமாவை அழிப்பதாகவும் இயக்குனர் பேரரசு வேதனையுடன் பேசியுள்ளார்.
சமீபகாலமாக சினிமா விமர்சனம் செய்பவர்கள் புற்றீசல் போல பெருகி வருகின்றனர். அதிலும் குறிப்பாக படத்தை விமர்சனம் செய்வதை விட, பிடிக்காத நடிகர், இயக்குனர்கள் மேலுள்ள வன்மம் அல்லது தங்களுடைய ஆதர்ஷ நாயகனின் படத்தை விட வேறெந்த படமும் சிறப்பாக இருந்துவிட கூடாது என்ற வன்மத்தை வெளிப்படுத்தும் விதமாகவே விமர்சனம் செய்கின்றனர். இதனால் எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் ‛நெகட்டிவ்' விமர்சனங்களால் படுதோல்வியை சந்தித்துள்ளன.
பெரிய படங்களுக்கும் ‛அடி'
அது எவ்வளவு பெரிய நடிகர், இயக்குனராக இருந்தாலும் அவர்களுக்கு மிகப்பெரிய ‛அடி' கொடுக்கும் அளவிற்கு சென்றுவிடுகிறது. உதாரணத்திற்கு ‛இந்தியன் 2, கேம் சேஞ்சர், தக்லைப்', சமீபத்தில் வெளியான ‛கூலி' வரை கடும் விமர்சனம் தொடர்கிறது.
இதனை தடுக்க திரையுலகை சேர்ந்த சிலர் குரல் கொடுத்தாலும், அதற்கு தீர்வு கிடைப்பதில்லை. இந்த நிலையில், எஸ்.எஸ்.முருகராசு இயக்கத்தில் விஜய் கவுரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'கடுக்கா' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு, இது தொடர்பாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
சுயநலம்
விழாவில் பேரரசு பேசியதாவது: சினிமாவில் இருப்பவர்களே சினிமாவுக்கு ஆபத்தாக இருக்கின்றனர். சினிமா நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பதில்லை, அவர்கள் படம் மட்டும் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். எல்லோரும் சுயநலமாக யோசித்தால் எப்படி நல்லா இருக்கும். அவர்களே சினிமாவை அழிக்கின்றனர். யாரும் சினிமாவை காப்பாற்ற நினைப்பதில்லை. நாங்கள் பேசுவது ஆதங்கம் தான், தீர்வு இல்லை. நம்மை வாழ வைத்த சினிமாவை நாம் வாழ வைக்க வேண்டும்.
வன்மம்
ஒரு படம் வெளியாகிவிட்டாலே அது விமர்சனத்திற்கு உள்ளானது தான். ஆனால் படத்தை பற்றிய விமர்சனமாக இல்லாமல், சிலர் படம் ஓடக்கூடாது, படத்தை பார்க்க கூடாது, அழிக்க வேண்டும் என்பதற்காகவே வன்மத்தை கக்கும் விதமாக விமர்சனம் செய்கின்றனர். இப்போதெல்லாம் படம் பார்ப்பவர்கள் எல்லாம் விமர்சனம் செய்கின்றனர். நல்லா இருக்கிறதா இல்லையா என சொல்வதை விட வன்மத்தை கக்குகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.
பேரரசு கூறியதுபோல், இது ஆதங்கத்தின் வெளிப்பாடாக இருந்தாலும், இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எண்ணமாக உள்ளது. வன்ம விமர்சனத்திற்குள் பல நல்ல படங்களும் சிக்கி தவித்த நிகழ்வுகளும் நடந்தேறியுள்ளன. ஆனால், இதனை செய்யும் சினிமாவில் உள்ளவர்கள் தங்களுக்கும் இதே கதி வரும் என்பதையும் நினைவில் கொண்டால் மாறலாம்.