தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

தெலுங்கு நடிகர் சிரஞ்சிவிக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுபற்றி அறிவித்துவிட்டு தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டார். இதனால் அவர் நடித்து வந்த காட்பாதர் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
தற்போது பூரண நலமடைந்துள்ள சிரஞ்சீவி நேற்று ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கிய காட்பாதர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மோகன்ராஜா இயக்குகிறார். இது மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் ரீமேக் ஆகும்.
இது தவிர சிரஞ்சீவியும், அவரது மகன் ராம்சரணும் இணைந்து நடித்துள்ள ஆச்சார்யா படம் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் படங்களின் வெளியீட்டுக்கு பிறகு ஆச்சார்யா வெளிவரும் என்று தெரிகிறது.