தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் | எம்புரான் சர்ச்சையால் விருது குழுவால் புறக்கணிக்கப்பட்ட ஆடுஜீவிதம் : ஊர்வசி குற்றச்சாட்டு | தலைவன் தலைவி ரூ.75 கோடி வசூல் | விளம்பர வீடியோவில் உலக சாதனை படைத்த தீபிகா படுகோனே | கமல்ஹாசன் வாழ்த்தினார் : மற்றவங்க தேசிய விருது பெற்றவர்களை பாராட்டாத சினிமாகாரர்கள் |
மோகன்லாலை வைத்து வில்லன், மிஸ்டர் பிராடு உள்ளிட்ட நான்கு படங்களை இயக்கிய, அவரது ஆஸ்தான இயக்குனரான பி.உன்னிகிருஷ்ணன் தற்போது ஐந்தாவதாக ஆராட்டு என்கிற படத்தையும் இயக்கி முடித்துவிட்டார். இந்தப்படம் வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கிறது.சமீப வருடங்களாக தொடர்ந்து மோகன்லால் படங்களையே இவர் இயக்கி வந்தாலும் இயக்குனராக அவர் அறிமுகமான காலகட்டத்தில் சுரேஷ்கோபி, பிரித்விராஜ், மம்முட்டி ஆகியோரின் படங்களையும் இயக்கியுள்ளார்.
கடந்த 2010ல் மம்முட்டி நடித்த பிரமாணி என்கிற படத்தை இயக்கியிருந்தார் உன்னிகிருஷ்ணன்.. இதையடுத்து 12 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் மீண்டும் மம்முட்டி நடிக்கும் படம் ஒன்றை இயக்க உள்ளாராம் உன்னிகிருஷ்ணன். இந்த வருடத்திலேயே படத்தை ஆரம்பித்து ரிலீசும் செய்துவிட திட்டமிட்டுள்ளனராம். விரைவில் இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என தெரிகிறது.