நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'கூடே' என்கிற படத்தில் நஸ்ரியாவின் காதலராக நடித்தவர் ரோஷன் மேத்யூ. நிவின்பாலியுடன் இவர் இணைந்து நடித்த 'மூத்தோன்' படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்து அதிரவைத்தார். அந்தப்படத்தை பார்த்துவிட்டு பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்,. தான் இந்தியில் இயக்கிய 'சோக்ட்' என்கிற படத்திலும் இவருக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்தார். சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் ப்ரித்விராஜ் நடிப்பில் வெளியான குருதி என்கிற படத்திலும் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தார் ரோஷன் மேத்யூ..
இது ஒரு பக்கமிருக்க தமிழில் அஜய் ஞானமுத்து டைரக்சனில் விக்ரம் நடித்துவரும் படம் 'கோப்ரா' படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில், ரோஷன் மேத்யூ நடித்துள்ளார். முதலில் இந்த கேரக்டரில் மலையாள இளம் நடிகர் ஷேன் நிகம் என்பவர் தான் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் அவர் மலையாளத்தில் தயாரிப்பாளர் ஒருவருடன் மோதல் போக்கை கடைபிடித்து, ரெட்கார்டு போடும் அளவுக்கு பிரச்சனை பெரிதானதால், அவரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக ரோஷன் மேத்யூ. ஒப்பந்தம் ஆனார்.
தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ரோஷன் மேத்யூவின் நடிப்பு குறித்து சிலாகித்து பதிவிட்டுள்ளார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. “ரோஷன் மேத்யூ.. உங்களைப் போன்ற வரமாக கிடைத்த நடிகருடன் பணி புரிந்தது இனிமையான அனுபவம்.. நிஜமாகவே நீங்கள் அற்புதமான மனிதர். உங்களுடைய காட்சிகளை திரையில் பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார் அஜய் ஞானமுத்து