மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் |
மலையாள திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சீனியர் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் நடிகர் சித்திக்.. மம்முட்டி, மோகன்லால் என இருவரது அன்புக்கும் பாத்திரமானவர். இவர்கள் இருவரின் படங்களில் தவறாமல் இடம்பெற்று விடுவார். இந்தநிலையில் சமீபத்தில் சித்திக்கின் மகன் ஷாஹீன் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து தற்போது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை தடபுடலாக நடத்தியுள்ளார் நடிகர் சித்திக். இந்த நிகழ்வில் மோகன்லால், மம்முட்டி இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்
இவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒன்றாக கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்பதால், இதுகுறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியானதும் மிகப்பெரிய அளவில் வைரலாகின. கடந்த மாதம் வரை தாடியுடன் காணப்பட்ட மம்முட்டி, தற்போது நடித்துவரும் சிபிஐ-5 படத்திற்காக கிளீன் ஷேவ் செய்த முகத்துடன் காட்சி அளித்தார். அதேசமயம் சமீபத்தில் தான் இயக்கிவரும் பாரோஸ் என்கிற படத்திற்காக புதிதாக வளர்த்திருக்கும் தாடியுடன் புதிய கெட்டப்பில் மோகன்லாலும் பார்ப்பதற்கு வித்தியாசமாக காட்சியளித்தார்.