கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
மலையாள திரையுலகில் நேரம், பிரேமம் என இரண்டு படங்களை மட்டுமே இயக்கி இருந்தாலும் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் அங்கே மோஸ்ட் வான்டட் இயக்குனர் ஆகவே வலம் வருகிறார். கடந்த ஏழு வருடங்களாக படம் எதுவும் இயக்காத நிலையில் தற்போது பிரித்விராஜ், நயன்தாரா இருவரின் நடிப்பில் கோல்டு என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை வெளியிட்டார் அல்போன்ஸ் புத்ரன்.
நாயகன் நாயகி தவிர படத்தில் இடம்பெறும் பல கதாபாத்திரங்கள் அந்த போஸ்டரில் விதவிதமான கோணத்தில் நேராகவும் தலைகீழாகவும் இடம்பெற்றிருந்தனர். இந்த நிலையில் இந்த போஸ்டர் சமீபத்தில் வெளியான ஹாலிவுட் படமான எவரிதிங் எவரிவேர் ஆல் அட் ஒன்ஸ் என்கிற படத்தின் போஸ்டரைப் போலவே 90% பொருந்தியிருக்கிறது என்பதை கண்டுபிடித்த நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் இந்த தகவலை பரப்பி வருகின்றனர்.
இரண்டு போஸ்டர்களிலும் அந்த படத்தின் கதாபாத்திரங்கள் இடம் பெற்றிருப்பதும் குறிப்பாக அதில் வரையப்பட்டுள்ள வட்டமும் இது அந்தப்படத்தின் போஸ்டரை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது என்பதை தெளிவாகவே சொல்கிறது. ஒருவேளை இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் அந்த படத்தின் போஸ்டரால் ஈர்க்கப்பட்டு அதேபாணியில் இப்படி உருவாக்கியிருக்கலாம் என்று அவரை விட்டுக்கொடுக்காத ரசிகர்கள் கூறி வருகின்றனர்.