5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
மலையாள திரையுலகில் நடிகர் பிரிதிவிராஜ் பிசியான நடிகராக நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அவர் நடிப்பில் துவங்கப்பட்ட ஆடுஜீவிதம் திரைப்படம் பல கட்ட படப்பிடிப்புகளாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கொரோனா முதல் அலை பரவ ஆரம்பித்த சமயத்தில் ஜோர்டான் நாட்டில் உள்ள வாடி ரம்மில் உள்ள பாலைவனப்பகுதியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது லாக்டவுன் காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேல் அங்கேயே பிரித்விராஜ் மற்றும் படக்குழுவினர் முடங்கிக் கிடக்க நேரிட்டது.
இந்த படத்தில் கேரளாவில் இருந்து துபாய்க்கு சென்று பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் நஜீப் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பிரித்விராஜ். இந்த நிலையில் மீண்டும் படப்பிடிப்பை அதே வாடி ரம் பகுதியில் தற்போது நடத்தி வருகின்றனர் ஆடுஜீவிதம் படக்குழுவினர். இதற்காக கடந்த மாதமே பிரித்விராஜ் கேரளாவில் இருந்து கிளம்பி சென்றுவிட்டார்.
இந்த நிலையில் அவரது மகள் அலங்கரிதா தந்தையை பார்க்க வேண்டும் அடம் பிடித்ததால் மகளை அழைத்துக்கொண்டு கணவரை பார்ப்பதற்காக படப்பிடிப்பு நடக்கும் பாலைவனத்திற்கே கிளம்பி வந்துவிட்டார் பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன். மனைவி குழந்தையின் வருகையால் படப்பிடிப்பிற்கு அவ்வப்போது கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு குடும்பத்துடன் ரிலாக்ஸாக ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பி விடுகிறாராம் பிரித்விராஜ்.