நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு |
மலையாள சினிமாவில் நடிகர்களாக இருந்து இயக்குனர்களாக மாறியவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு நடிகர் பிரித்விராஜ் மோகன்லால் நடித்த லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறியதுடன் அதை வெற்றி படமாகவும் ஆக்கினார். இதை தொடர்ந்து கிட்டத்தட்ட 40 வருடமாக நடிப்புலகிலேயே பயணித்து வந்த மோகன்லாலும் பாரோஸ் என்கிற படத்தை இயக்குவதாக அறிவித்தார். வழக்கமான கமர்சியல் ஆக்சன் பாதையில் செல்லாமல் குழந்தைகளை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியுள்ளார் மோகன்லால்.
போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது சேர்த்து வைத்த சொத்துக்களை பாதுகாக்கும் பாரோஸ் என்கிற பாதுகவாலன் கதாபாத்திரத்திலும் மோகன்லால் நடித்துள்ளார். சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தியாவின் முதல் 3டி படமாக உருவான மை டியர் குட்டிச்சாத்தான் என்கிற திரைப்படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ புன்னூஸ் என்பவர் தான் இந்தப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார். கடந்த வருடம் மார்ச் மாதம் துவங்கிய படப்பிடிப்பு சீரான இடைவெளிகளில் நடைபெற்று தற்போது சென்னையில் நடைபெற்று வந்த அதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இந்த வருடமே இந்த படத்தை ரிலீஸ் செய்யும் முடிவில் இருக்கிறாராம். மோகன்லால்.