தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
முதன்முதலாக இந்தியாவிலேயே தயாராகியுள்ள விமானம் தாங்கி போர்க்கப்பல் ‛ஐஏசி விக்ராந்த்' கொச்சியில் நடைபெற்று வந்த இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை இந்திய கடற்படை வசம் ஒப்படைக்கப்பட்டது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் மோகன்லால் இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலை நேற்று பார்வையிட்டார். அவருக்கு கடற்படை அதிகாரிகள் மிக சிறப்பான வரவேற்பு அளித்தனர். மோகன்லாலுடன் ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ அதிகாரியும் பிரபல திரைப்பட இயக்குனருமான மேஜர் ரவியும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
மோகன்லாலை பொறுத்தவரை ராணுவத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக சில ராணுவப்படங்களில் நடித்திருக்கிறார். அதனால் 2009ம் ஆண்டில் இந்திய தரைப்படை மோகன்லாலுக்கு லெப்டினன்ட் கலோனல் (துணைநிலை படை அதிகாரி) பட்டத்தை அளித்து கவுரவித்தது. இதனை தொடர்ந்து மோகன்லாலும் அந்த கவுரவத்துடன் அவ்வப்போது ராணுவம் மற்றும் அரசு சம்பந்தப்பட்ட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறார். அந்த வகையில்தான் தற்போது இந்த விமானம் தாங்கி போர்க்கப்பலையும் பார்வையிட்டுள்ளார் மோகன்லால்.