போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

மோகன்லால் நடிப்பில் கடந்த ஒரு வருடமாக வெளியாகி வரும் படங்களை கவனித்து பார்த்தால் தியேட்டர்கள் மற்றும் ஓடிடி தளம் இரண்டையுமே அவர் சரியாக பேலன்ஸ் பண்ணி படங்களை வெளியிட்டு வருவது நன்றாக புரியும். கொரோனா காலகட்டத்தில் திரிஷ்யம் 2 மற்றும் புரோ டாடி ஆகிய படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டார் மோகன்லால். அதேசமயம் அவர் நடித்த வரலாற்று படமான மரைக்கார்' திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. ஆனாலும் மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை. அதேபோல மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆராட்டு திரைப்படமும் தியேட்டர்களில் வெளியாகி தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு வெளியான டுவல்த் மேன் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது.
இந்த கணக்குப்படி அடுத்து வெளியாக இருக்கும் அவரது படம் தியேட்டர்களில் தான் வெளியாகும் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் அதை உறுதிப்படுத்துவது போல மோகன்லால் நடித்துள்ள மான்ஸ்டர் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி தியேட்டர்களில் தான் ரிலீசாகிறது என தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
மோகன்லாலை வைத்து புலிமுருகன் என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் வைசாக்கும் அந்தப்படத்திற்கு கதை எழுதிய உதயகிருஷ்ணாவும் மீண்டும் மோகன்லாலுடன் இணைந்து இந்த படத்தில் பணியாற்றி உள்ளதால் மான்ஸ்டர் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால் இந்த படம் தியேட்டரில் தான் வெளியாகும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகலாம்.