வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

சமீபகாலமாக மலையாளத்தில் ஹிட்டான திரைப்படங்கள் தெலுங்கில் தொடர்ந்து ரீமேக்காகி வருகின்றன. அதிலும் குறிப்பாக நடிகர் பிரித்விராஜ் நடித்த படங்களே அதிகம் ரீமேக் செய்யப்படுகின்றன. அந்த வகையில் கடந்த பிரித்விராஜ் நடித்த அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு பவன் கல்யாண் நடிப்பில் பீம்லா நாயக் என்கிற பெயரில் வெளியானது. பிரித்விராஜ் இயக்கி முக்கிய வேடத்திலும் நடித்திருந்த லூசிபர் திரைப்படம் தற்போது சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் என்கிற பெயரில் நேற்று வெளியாகி வெற்றியும் பெற்றுள்ளது.
இந்தநிலையில் சில வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான மும்பை போலீஸ் என்கிற திரைப்படமும் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது. மலையாளத்தில் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிய இந்தப்படம் தெலுங்கில் மகேஷ் என்பவர் இயக்கத்தில் ஹன்ட் என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக சுதீர்பாபு நடித்துள்ளார். இந்த படத்தின் ரீமேக்கில் இவர் நடிப்பதை ஒரு துணிச்சலான முயற்சி என்றே சொல்லலாம்.
காரணம் இந்தப்படத்தில் கதையின் நாயகன் அதிரடி போலீஸ் ஆபிசர். ஆனால் நிஜத்தில் அவனுக்கு இருக்கும் இன்னொரு முகம் தான் ஹோமோ செக்சுவல் முகம். மலையாளத்தில் மற்ற ஹீரோக்கள் அனைவரும் தயங்கியபோது, பிரித்விராஜ் மட்டும் இமேஜ் பற்றி கவலைப்படாமல் தைரியமாக முன்வந்து நடித்து பாராட்டை பெற்றார். இப்போது அதே கதாபாத்திரத்தை சுதீர் பாபு ஏற்று நடித்துள்ளார் முக்கிய வேடத்தில் நடிகர் பரத் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.