தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தெலுங்கில் 'தசரா' படம் 100 கோடி வசூலை எட்டி ஆர்ப்பாட்டமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றால் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி 50 கோடிக்கு மேல் வசூலித்து சத்தமில்லாமல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது 'பலகம்' என்ற தெலுங்கு படம். பிரியதர்ஷினி புலிகொண்டா, காவ்யா கல்யாண்ராம், சுதாகர் ரெட்டி உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை வேணு இயக்கி உள்ளார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜ் தயாரித்துள்ளார்.
இந்த படம் ஆந்திர மாநில கிராமத்து கலாச்சாரத்தை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சின்ன சின்ன உரசல்களால் பிரிந்த தெலுங்கு குடும்பம் ஒன்று அந்த வீட்டின் மூத்தவர் மரணத்தால் எப்படி ஒன்று சேர்கிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தை பார்க்கும் ஆந்திரா மற்றும் தெலுங்கான பெண்கள் கண்ணீர்விட்டு அழுதபடியே தியேட்டரை விட்டு வெளியே வரும் வீடியோக்கள் ஆந்திராவில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தை தெலங்கானாவின் பல பகுதிகளில் தெருவில் திரை கட்டி, இலவசமாகத் திரையிட்டு வருகிறார்கள். உள்ளூர் கேபிள் தொலைக்காட்சியில் அடிக்கடி ஒளிபரப்புகிறார்கள். தியேட்டர்கள் இல்லாத ஊருக்கும் படத்தை கொண்டு செல்ல உள்ளூர் இளைஞர்களே இந்த படத்தை தங்கள் ஊரில் ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு காட்டுகிறார்கள். தற்போது படம் ஒடிடியிலும் வெளிவந்திருப்பதால் அதனை பெரிய திரையில் காட்டுகிறார்கள். இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தயாரிப்பாளர் தில் ராஜூ நிஜாமாபாத் போலீஸில் புகார் அளித்துள்ளார். பல கிராமங்களில் இந்தப் படத்தை இலவசமாகத் திரையிட்டுள்ளதால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும் படத்தைத் திரையிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் கூறியுள்ளார்.