சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் |

மலையாளத்தில் கடந்த வருடம் ஷாஜி கைலாஷ் டைரக்சனில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான படம் கடுவா. பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடித்திருந்தார். இந்த படம் நிஜத்தில் வாழ்ந்த கடுவாக்குன்னல் குருவச்சன் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி இருந்தது. படம் முழுவதுமே பிரித்விராஜ் மற்றும் விவேக் ஓவராய் இருவருக்குமான ஈகோ யுத்தமாகவே உருவாக்கப்பட்டிருந்தது.
ஆக்சன் படமாக உருவாகியிருந்தாலும் இந்த படத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற டைட்டில் பாடலான பாலாப்பள்ளி என்கிற பாடல் படம் வெளியாவதற்கு முன்பே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பாடல் வெளியாகி சரியாக ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது யூட்யூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு புதிய பெருமையை பெற்றுள்ளது.
இந்த பாடலுக்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்திருந்தார். நாட்டுப்புற பாடல் பாணியில் உருவாகி இருந்த இந்த பாடலை அதுல் நருகரா என்பவர் பாடியிருந்தார். பாடல் வரிகளை சந்தோஷ் வர்மா, ஸ்ரீஹரி தரயில் ஆகியோர் எழுதியிருந்தனர்.
கடந்த வருடத்தில் வினீத் சீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால் நடிப்பில் அறிமுக இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வகாப் இசையில் வெளியான ஹிருதயம் படத்தில் இடம்பெற்ற தர்ஷனா என்கிற பாடலும் 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்த இன்னொரு பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.