துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மலையாள திரை உலகில் காமெடி, ஆக்ஷன் என இரண்டு ஏரியாவிலும் திறமை காட்டக்கூடிய அதே சமயம் குடும்ப பார்வையாளர்களையும் அதிக அளவில் தன் வசம் வைத்திருக்க கூடியவர் நடிகர் திலீப். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரபல நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி சிறை சென்று ஒரு சிறிய சரிவை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு தற்போது மீண்டும் பிஸியான நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவருக்கு ஏற்கனவே ஹிட் கொடுத்த ராம்லீலா பட இயக்குநர் அருண்கோபி இயக்கத்தில் திலீப், தமன்னா நடித்து வரும் படம் பாந்த்ரா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தன.
இந்த நிலையில் இந்த படம் வரும் நவம்பர் பத்தாம் தேதி வெளியாகும் என திலீப்பின் பிறந்தநாளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல அறிமுக இயக்குனர் ரதீஸ் ரகுநந்தன் இயக்கத்தில் திலீப் நடித்துவரும் தங்கமணி என்கிற படத்தின் செகண்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது. கடந்த சில வருடங்களாகவே திலீப் நடிப்பில் உருவாகி பாதியில் நிற்கும் புரபசர் டிங்கன் என்கிற படத்தை பிரபல மலையாள தயாரிப்பு நிறுவனமான கோகுலம் பிலிம்ஸ் தற்போது கைப்பற்றியுள்ளது என்றும் இது குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.