துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மலையாளத்தில் ஒன்பதாம் நூற்றாண்டு வரலாற்று பின்னணியில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது 'கத்தனார்' திரைப்படம். ஜெயசூர்யா கதாநாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் நடிப்பதன் மூலம் நடிகை அனுஷ்கா முதன்முறையாக மலையாள திரையுலகில் அடி எடுத்து வைக்கிறார். மலையாள திரையுலகிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் இது என்று சொல்லப்படுகிறது. இயக்குனர் ரோஜின் தாமஸ் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தை மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான கோகுலம் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஏழு மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சமீபத்தில் சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார் நடிகர் மோகன்லால். படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்த அவருக்கு படக்குழுவினர் ஒரு விநாயகர் சிலையை பரிசளித்து வரவேற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் மோகன்லாலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்பது போன்ற தகவல்கள் சோசியல் மீடியாவில் யூகமாக கிளம்பியுள்ளன.