மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
மலையாளத்தில் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட படம் ஆடு ஜீவிதம். பிரபல கதாசிரியரும் இயக்குனருமான பிளஸ்சி, ஆடு ஜீவிதம் என்கிற நாவலை தழுவி இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக பிரித்விராஜ் மற்றும் கதாநாயகியாக அமலாபால் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பதன் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் நுழைந்துள்ளார்.
இந்த படத்தில் துபாயில் ஒட்டகம் மேய்க்கும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த இளைஞராக பிரித்விராஜ் நடித்துள்ளார். இதற்காக அவர் உடல் எடையை கூட்டி குறைத்து நடிக்க வேண்டி இருந்தது. இதனால் இந்த படம் கடந்த சில வருடங்களாக மிகப்பெரிய இடைவெளிகள் விட்டு படபிடிப்பு நடைபெற்றது. ஒரு வழியாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதன் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் 2024 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.