பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி |
மலையாளத்தில் பெரும்பாலும் முன்னணி நடிகர்களை வைத்தே படம் இயக்கி வெற்றிப்பட இயக்குனராக முதல் இடத்தில் பல வருட காலம் இருப்பவர். இயக்குனர் ஜோஷி. சமீபத்தில் இவரது இயக்கத்தில் ஆண்டனி என்கிற படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து அடுத்ததாக மோகன்லாலை வைத்து இவர் ‛ரம்பான்' என்கிற படத்தை இயக்குகிறார். இது குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தந்தை மகள் பாசத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் மகள் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அறிமுகமாகிறார் நடிகை கல்யாணி பணிக்கர்.
இவர் மலையாள திரையுலகில் மிகப்பெரிய குணச்சித்திர நடிகையான பிந்து பணிக்கரின் மகள். விஜய் நடித்த லவ் டுடே திரைப்படத்தில் கதாநாயகி சுவலட்சுமியின் அம்மாவாக நடித்தவர் தான் பிந்து பணிக்கர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரபல மலையாள வில்லன் நடிகரான சாய் குமாரை இவர் மறுமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிந்து பணிக்கருக்கும் அவரது முன்னாள் கணவர் பிஜூ நாயருக்கும் பிறந்த மகள் தான் இந்த கல்யாணி பணிக்கர் என்பதும் குறிப்பிடத்தக்கது.