நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | ‛கில்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோ, வில்லன் யார் தெரியுமா? | அரசியல் கதைகள பின்னனியில் தனுஷ் 54வது படம்! | ஆகஸ்ட் 8ல் 6 படங்கள் ரிலீஸ்… | 2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் |
தென்னிந்திய அளவில் தற்போது பிஸியான நடிகர் என்றால் அது நடிகர் பிரித்திவிராஜ் தான். ஒரு பக்கம் தயாரிப்பு, டைரக்சன், இன்னொரு பக்கம் தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிப்பு என பிஸியாக வலம் வரும் பிரித்விராஜ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் 'ஆடுஜீவிதம்'. கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு மேல் தயாரிப்பில் இருந்த இந்த படம் ஒரு வழியாக வரும் மார்ச் 28ம் தேதி வெளியாக இருக்கிறது.
மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக இருகிறது. இதனையடுத்து இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தமிழகம், ஆந்திரா என தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் பிரித்விராஜ். அந்த வகையில் ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய பிரித்விராஜ், சிரஞ்சீவியுடன் தான் இணைந்து பணியாற்ற முடியாமல் போனதற்கான காரணங்களை விரிவாக கூறினார்.
இது குறித்து அவர் பேசும்போது, “2018-ல் சிரஞ்சீவி நடிப்பில் 'சைரா நரசிம்ம ரெட்டி' படம் உருவானபோது அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக என்னை சிரஞ்சீவி அழைத்தார். ஆனால் அந்த சமயத்தில் ஆடுஜீவிதம் படத்திற்காக நான் மிக நீண்ட தாடி வளர்த்து கெட்டப் மாற்றி இருந்தேன். அதனால் என்னால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதைத்தொடர்ந்து மலையாளத்தில் நான் இயக்கிய லூசிபர் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய சிரஞ்சீவி தெலுங்கிலும் நானே அந்தப் படத்தை இயக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அந்த நேரத்திலும் ஆடுஜீவிதம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால் என்னால் அவரது கோரிக்கையை மீண்டும் ஏற்றுக்கொள்ள முடியாமல் போய்விட்டது. இப்படி இரண்டு முறையும் சிரஞ்சீவியுடன் இணைந்து பணியாற்ற முடியாமல் போனதற்கு ஆடுஜீவிதம் படம் தான் காரணம்” என்று கூறினார்.