'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... | மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா |

மலையாள திரையுலகில் கடந்த பல வருடங்களாக முன்னணி இயக்குனராக இருப்பவர் ஜோஷி. மோகன்லால், மம்முட்டி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது மோகன்லால் நடிப்பில் ரம்பான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கொச்சியில் இவர் வசிக்கும் பனம்பள்ளி நகரில் உள்ள வீட்டில் இருந்து சுமார் ஒரு கோடி மதிப்பிலான நகைகள் மர்ம நபர் ஒருவரால் கொள்ளையடிக்கப்பட்டன. இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து கிடைத்த தகவல்கள், சிசி டிவியில் பதிவான கார் விபரங்கள் ஆகியவற்றை வைத்து போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் பீகாரைச் சேர்ந்த முகமது இர்பான் என்பவர் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என்பதும் அவர் கொள்ளையடித்த நகைகளுடன் பீகாரை நோக்கி காரில் சென்று கொண்டிருக்கிறார் என்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து சம்பந்தப்பட்ட அந்த நபர் உடுப்பியில் உள்ள போலீசாரால் கைது செய்யப்பட்டு நகைகள் மற்றும் காருடன் கேரள போலீஸ் சார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த திருட்டில் இவர் மட்டும்தான் ஈடுபட்டுள்ளாரா அல்லது உள்ளூரில் இவருக்கு யாராவது உதவியாக செயல்பட்டுள்ளார்களா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.