சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் தனது ஜனசேனா கட்சி மூலமாக தான் போட்டியிட்ட இடங்களில் எல்லாம் வெற்றியை பெற்றுள்ளார். முதன்முறையாக அவர் ருசிக்கும் மாபெரும் வெற்றி இது என்பதால் அவருக்கு தெலுங்கு திரையுலகில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்த நிலையில் டில்லி சென்ற பவன் கல்யாண் தன்னுடன் தனது இரண்டாவது மனைவி ரேணு தேசாயின் மகன் அகிரா நந்தனையும் உடன் அழைத்துச் சென்றிருந்தார். பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கு பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் பவன் கல்யாண்.
தானும் தந்தையும் பிரதமர் மோடியுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது தாய்க்கு அனுப்பி வைத்த அகிரா நந்தன், பிரதமரை சந்தித்த அந்த கணம் குறித்து சிலாகித்து விவரித்துள்ளார். ஏற்கனவே பாஜகவில் இருக்கும் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணு தேசாய் தனது மகன் பிரதமரின் அருகில் நிற்பதைக் கண்டு பூரிப்பில் மகிழ்ச்சி அடைந்ததாகவும் அதே சமயம் ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டதாகவும் கூறியுள்ளார்.