எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் |
சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சாபா தேர்தலில் கேரளாவில் பாஜக சார்பாக திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பிரபல நடிகர் சுரேஷ் கோபி வெற்றி பெற்று எம்பி ஆகியுள்ளார். அது மட்டுமல்ல சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில் அவரும் ஒரு அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். கேரளாவில் முதன்முறையாக பாஜகவிற்கு ஒரு எம்பியை தேடிக்கொடுத்ததற்காக அவருக்கு இந்த அமைச்சர் பதவி பரிசாக கிடைத்துள்ளது. இந்த நிலையில் சுரேஷ் கோபி தனது அரசு உதவியாளராக தன்னுடைய ஆஸ்தான மேக்கப் மேனான சினோஜ் என்பவரை நியமித்துள்ளார்.
கடந்த 18 வருடங்களாக சுரேஷ் கோபிக்கு மேக்கப்மேனாகவும் அவரது சுக துக்கங்களில் பங்கெடுத்துக் கொள்ளும் ஒரு நண்பராகவும் பயணித்து வந்த சினோஜ், தற்போது இதன் மூலம் புதிய வெளிச்சம் பெற்றுள்ளார். இதற்கு முன்பே சுரேஷ் கோபி ராஜ்யசபா எம்பியாக இருந்த போதும் ஒரு வருடம் அவருக்கு அரசு உதவியாளராக இவர் வேலை பார்த்துள்ளார் என்பதும், தற்போது மீண்டும் சுரேஷ்கோபி மத்திய அமைச்சராகி உள்ள நிலையில் அவரது உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.