துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
மலையாளத்தில் சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட முன்னணி நடிகர் மோகன்லால் முதன் முறையாக இயக்குனராக மாறி பரோஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளார். மைடியர் குட்டி சாத்தான் படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ பொன்னூஸ் தான் இந்த படத்திற்கும் கதை எழுதியுள்ளார். இந்த படத்தை இயக்கியுள்ளதுடன் பரோஸ் என்கிற முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் மோகன்லால்.
இது வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்த காலத்தில் அவர் சம்பாதித்த சொத்துக்களை சேர்த்து வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒரு பாதுகாவலர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வரும் ஓணம் பண்டிகை ரிலீஸாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஜெர்மனி வாழ் இந்தியரும், கேரளாவை சேர்ந்த மலையாள எழுத்தாளரான ஜார்ஜ் துண்டிப்பரம்பில் என்பவர், இந்த படத்தின் கதை தான் எழுதிய நாவலின் காட்சிகளை தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக கூறி குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால் இந்தக் கதை இந்த படத்தின் கதாசிரியரான ஜிஜோ பொன்னூஸ் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. தற்போது குற்றம் சாட்டியுள்ள ஜார்ஜ் துண்டிப்பாரம்பில் 2009ல் தான் எழுதிய மாயா என்கிற நாவலை தழுவி, அதில் எழுதப்பட்டுள்ள கப்பிரி முத்தப்பன் என்கிற கதாபாத்திரத்தை அப்படியே இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். படம் வெளியாக ஒரு மாதமே இருக்கும் நிலையில், ஏற்கனவே பலமுறை ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட இந்த பரோஸ் திரைப்படம், இந்த புதிய பிரச்சினையை சரி செய்து குறித்த தேதியில் வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.