5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் |
இதயத்தை திருடாதே படம் மூலம் தமிழ் ரசிகர்களின் இதயங்களையும் திருடியவர் தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனா. கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துள்ள நாகார்ஜுனா ஒரு பக்கம் ஆக்சன் மற்றும் காதல் படங்களில் நடித்தாலும் இன்னொரு பக்கம் ஆச்சரியமாக ஆன்மிக படங்களிலும் நடித்து வெகுஜன ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி நாகார்ஜுனாவின் 65வது பிறந்தநாள் வருகிறது. இதை கொண்டாடும் விதமாக கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அவரது நடிப்பில் வெளியான 'மாஸ்' திரைப்படம் 4கே முறையில் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ஆகஸ்ட் 28ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.
இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமான அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது. நடன இயக்குனராக இருந்து நடிகராக மாறி சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வளர்ந்து வந்த சமயத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தை இயக்கியதன் மூலம் ஒரு கமர்சியல் இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்தினார். நாகார்ஜுனாவின் திரையுலக பயணத்தில் 'மாஸ்' ஒரு மிக முக்கியமான படம் என்பதை மறுக்க முடியாது. ஜோதிகா கதாநாயகியாக நடித்திருந்த இந்த படத்தில் ரகுவரன் வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.