துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
கேரளாவை சேர்ந்த பிரபல எழுத்தாளரும் மலையாள இயக்குனருமான எம்டி வாசுதேவன் நாயர் எழுதிய ஒன்பது சிறுகதைகள் தற்போது 'மனோரதங்கள்' என்கிற பெயரில் ஆந்தாலாஜி திரைப்படமாக உருவாகியுள்ளது. மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களான பிரியதர்ஷன், சந்தோஷ் சிவன், ரஞ்சித் உள்ளிட்ட ஏழு இயக்குனர்கள் இயக்கியுள்ள இந்த ஆந்தாலஜி படத்தில் ஒவ்வொரு அத்தியாயங்களிலும் மோகன்லால், மம்முட்டி, கமல்ஹாசன், பஹத் பாசில் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
வரும் ஆகஸ்ட் 15ம் தேதி இந்த படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த 9 அத்தியாயங்களில் ஒன்றான 'ஷெர்லாக்' என்கிற குறும்படத்தில் நடிகை நதியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் நடிகர் பஹத் பாசிலும் நதியாவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த ஆந்தாலஜி படம் விரைவில் வெளியாவதை முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் நதியா.