மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆடுஜீவிதம் மற்றும் குருவாயூர் அம்பலநடையில் என இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில் ஆடுஜீவிதம் திரைப்படம் சீரியஸான கதை அம்சத்துடன் வெளியாகி இருந்தது. இதற்கு முற்றிலும் மாறாக குருவாயூர் அம்பலநடையில் படத்தில் காமெடியில் கலக்கியிருந்தார் பிரித்விராஜ். தற்போது மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான எம்புரான் படத்தை இயக்கி வரும் பிரித்விராஜ் கிட்டத்தட்ட இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கியுள்ளார்.
இந்த நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்திற்கு நோபடி (Nobody) என்று டைட்டில் வைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் வித்தியாசமான ஹாரர் மிஸ்டரி திரில்லர் படமாக வெளியான ரோஷாக் படத்தை இயக்கிய இயக்குனர் நிசாம் பஷீர் தான் இந்த படத்தை இயக்க உள்ளார். இ4 என்டர்டைன்மென்ட் நிறுவனத்துடன் பிரித்விராஜும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்.