ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சமீப காலமாக மிகப்பெரிய ஹீரோக்களின் பழைய படங்களை ரிலீஸ் செய்யும் கலாச்சாரம் தெலுங்கு திரை உலகையும் விட்டு வைக்கவில்லை. அப்படி முன்னணி நடிகர்களின் படங்கள் மட்டுமே ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது வேறு நடிகர்கள் நடித்த ஹிட் அடித்த படங்களையும் ரீ ரிலீஸ் செய்ய துவங்கியுள்ளனர். அந்த வகையில் கடந்த 2006ல் சித்தார்த் ஜெனிலியா நடிப்பில் வெளியான பொம்மரிலு திரைப்படம் வரும் செப்டம்பர் 21ம் தேதி டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு ரீ ரிலீஸ் ஆக இருக்கிறது.
செல்வராகவனின் உதவி இயக்குனரான பாஸ்கர் என்பவர் தெலுங்கில் முதன்முறையாக இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் பொம்மரிலு பாஸ்கர் என்றே அழைக்கப்பட்டு வருகிறார். அந்த அளவிற்கு இந்த படம் அங்கே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பின்னர் தமிழில் இந்த படம் சந்தோஷ் சுப்ரமணியம் என்கிற பெயரில் அதே ஜெனிலியா மற்றும் ஜெயம் ரவி கூட்டணியில் வெளியாகி இங்கேயும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.