மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
மலையாள திரையுலகில் எங்கள் சொந்தம் லாலேட்டன் என அனைத்து மக்களும் கொண்டாடும் நடிகர் மோகன்லால். தி கம்ப்ளீட் ஆக்டர் என்று அழைக்கப்படும் அளவிற்கு தான் ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிகுந்த சிரத்தையுடன் நடிப்பதில் ரொம்பவே மெனக்கெடுவார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்த சமயத்தில் தனது நண்பரும், சக நடிகருமான மணியம்பிள்ளை ராஜு என்பவரை அழைத்து நடிக்காமல் வீட்டில் அடைந்து கிடப்பது மிக கொடுமையாக இருக்கிறது என தனது வருத்தத்தை பகிர்ந்து கொண்டு உள்ளார். அதுமட்டுமல்ல இவர்கள் இருவரும் 1989ல் அதிபன் என்கிற படத்தில் இணைந்து நடித்த போது நடந்த ஒரு சம்பவத்தையும் மணியம் பிள்ளை ராஜு கூறியுள்ளார்.
அந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் மோகன்லால் நடித்து வந்தார். அந்த சமயத்தில் அவருக்கு கடுமையான தொண்டை வலி. எந்த உணவுப் பொருளையும் விழுங்க கூட முடியாது. பரிசோதித்த டாக்டர்கள் அவரை மூன்று நாட்கள் ஓய்வெடுக்க கூறினார்கள். ஆனால் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தாக வேண்டிய நிலை. இது எதையும் வெளிக்காட்டாமல் படப்பிடிப்பில் அந்த சண்டைக் காட்சியில் உயிரைக் கொடுத்து நடித்த மோகன்லால், ஒவ்வொருமுறை காட்சி ஓகே ஆனதும் அங்கே பக்கத்தில் இருந்த அறைக்குச் சென்று தொண்டை வலி தாங்க முடியாமல் அவர் கதறினார். அதை நான் கண்கூடாக பார்த்தேன்.
அவர் நினைத்து இருந்தால் சிம்பிள் ஆக மூன்று நாட்கள் ஓய்வெடுத்து விட்டு வந்திருக்கலாம். ஆனால் சினிமா மட்டுமே அவர் மூச்சாக இருப்பதால் தன் உடல் நிலையை கூட பொருட்படுத்தாமல் தன்னால் யாருக்கும் எந்தவித நஷ்டமும் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். மலையாள திரை உலகில் எல்லா நடிகர்களுமே கடினமாக உழைக்கிறார்கள் தான்.. ஆனால் இவர்கள் எல்லோரையும் தாண்டி மோகன்லால் ரொம்பவே ஸ்பெஷல்” என்று கூறியுள்ளார் மணியம்பிள்ளை ராஜு.