சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
மலையாள திரையுலகில் சிறிய நடிகராக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபல நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளவர் நடிகர் ஷைன் டாம் சாக்கோ. 'பீஸ்ட்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதன் பிறகு அதன் இயக்குனரையும் நடிகர் விஜய்யின் நடிப்பையும் கிண்டலடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். தெலுங்கில் வெளியான 'தசரா', பின்னர் தமிழில் 'ஜிகர்தண்டா 2' உள்ளிட்ட படங்களிலும் வில்லனாக நடித்த இவர் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையாக பேசி சிக்குவதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
கடந்த 2015ல் கொச்சி கடவந்துரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் பயன்படுத்தினார் என போலீசார் இவரை கைது செய்தனர். இவருடன் சேர்ந்து போதைப் பொருள்கள் பயன்படுத்தினார்கள் என இன்னும் ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர். அன்பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார் ஷைன் டாம் சாக்கோ. சொல்லப்போனால் இந்த கைது வழக்கின் மூலம் தான் இவர் ஓரளவுக்கு பிரபலமாக துவங்கினார். இந்த வழக்கு பதியப்பட்டு 10 வருடம் கழிந்துள்ள நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த எர்ணாகுளம் கூடுதல் நீதிமன்றம் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட எட்டு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.