தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கடந்த டிசம்பர் மாதம் மலையாளத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் மார்கோ என்கிற திரைப்படம் வெளியானது. ஹனிப் அதேனி இயக்கிய இந்த படம் அதீத வன்முறை காட்சிகள் மற்றும் அதிரடியான ஏழு சண்டை காட்சிகள் கொண்ட படமாக உருவாக்கப்பட்டிருந்தது. குடும்பத்துடன் பார்க்க முடியாத படம் என்றாலும் கூட இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 100 கோடி வசூலையும் ஈட்டியது.
அதேசமயம் தற்போது ஒரு பக்கம் கேரள முதல்வர் இந்த படத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளது ஒரு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது என்றால், ஏற்கனவே இந்த படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் தற்போது ஓடிடியில் வெளியான நிலையில் அந்த ஒளிபரப்பு உரிமையும் ரத்து செய்யப்படுமோ என்கிற சூழல் உருவாகியுள்ளது. இதனால் படம் பல கோடி வசூலித்தாலும் கூட அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியாத சங்கடத்திற்கு ஆளாகி இருக்கிறார் மார்கோ படத்தின் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது.
இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறும்போது, “இந்த படம் வன்முறையை ஆதரிக்கும் படம் இல்லை. ஒரு கதை சொல்லும் முறை.. அவ்வளவுதான்.. இதற்கு முன்பும் கூட இதே போன்று வன்முறை காட்சிகள் நிறைந்த படங்கள் எச்சரிக்கை வாசகங்களுடன் வெளியாகி இருக்கின்றன. ஆனாலும் மார்கோ படத்திற்கு நிறைய எதிர்ப்புகள் எழுந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. இனிவரும் நாட்களில் இது போன்ற வன்முறை படங்களை நான் ஒருபோதும் தயாரிக்க மாட்டேன் என உறுதியாக கூறுகிறேன்” என்று கூறியுள்ளார்.
சாட்டிலைட் மற்றும் ஓடிடி வியாபாரங்களில் ஏற்பட்ட பாதிப்பு, கேரள முதல்வரின் கடும் எதிர்ப்பு ஆகியவை தான் அவரை இவ்வாறு முடிவெடுக்க வைத்துள்ளது என்று சொல்லப்படுகிறது.