தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாள திரையுலகின் சீனியர் நடிகரும், தற்போதைய மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபி நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாகி இருக்கும் படம் ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா). அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகி நடித்துள்ளார். பிரவீன் நாராயணன் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஜூன் 27 ரிலீஸ் செய்வதாக திட்டமிடப்பட்டு சில நாட்களுக்கு முன்பு சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்தில் காட்சிகளுக்கு எந்தவித கட்டும் கொடுக்காமல் யு/ஏ சான்றிதழ் கொடுத்தனர்.
அதேசமயம் படத்தின் டைட்டிலில் ஜானகி என்கிற பெயரை மாற்றும்படி படக்குழுவினருக்கு அறிவுறுத்தினார்கள். ஆனால் படத்தின் டைட்டிலை மாற்ற விரும்பாத படக்குழுவினர் இதன் ரிலீஸ் தேதியை தற்போது தள்ளி வைத்துள்ளனர். இந்த நிலையில் சென்சார் இப்படி கூறியதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சி காரணத்தை பிரபல மலையாள இயக்குனரும் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவருமான பி.உன்னிகிருஷ்ணன் தற்போது வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா படத்தில் ஜானகி என்கிற வார்த்தை இடம்பெறக் கூடாது என்று சென்சார் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதற்கு காரணம் படத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான ஒரு பெண் நீதி கேட்பது போன்று கதை உள்ளது. அந்த பெண்ணின் பெயர் ஜானகி என்று இருப்பது, இதிகாசத்தில் உள்ள சீதாவின் இன்னொரு பெயரை குறிக்கும் விதமாக இருக்கிறது. அப்படி பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு இந்த பெயரை வைக்க க்கூடாது அதனால் அதை மாற்றுங்கள் என்று கூறியுள்ளனர்.
ஆனால் இதை எழுத்துப்பூர்வமாக கொடுத்தால் தங்களுக்கு சிக்கல் வரும் என்பது தெரிந்து வாய்மொழியாகவே கூறியுள்ளார்களாம் சென்சார் அதிகாரிகள். சென்சாரின் இந்த அராஜகப்போக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது.. நிச்சயமாக இது குறித்து உடனடியாக அப்பீல் செய்யுங்கள் என்று படத்தின் இயக்குனருக்கு நான் ஆலோசனை கூறியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.