வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மலையாள சீனியர் நடிகரான சுரேஷ்கோபி கடந்த 10 வருடங்களில் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டு அரசியலில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். கடந்த வருடம் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக வெற்றி பெற்று தற்போது மத்திய இணை அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார். இதற்கிடையே, தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் தற்போது நடித்து வருகிறார் சுரேஷ்கோபி. அந்த வகையில் இவர் நடிப்பில் ஜேஎஸ்கே (ஜானகி Vs ஸ்டேட் ஆப் கேரளா) என்கிற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாக இருந்த நிலையில் படத்தின் டைட்டிலை மாற்றக் கூறி சென்சார் கெடுபிடி காட்டியதால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இன்னொரு பக்கம் அவர் ஏற்கனவே நடித்து வந்த ஒத்தக் கொம்பன் திரைப்படம் கிட்டத்தட்ட பாதி படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது. இந்த முறை கேரளாவில் கோட்டயம் அருகில் உள்ள பாலா என்கிற ஊரில் நடக்கும் கிராம திருவிழா காட்சிகள் படமாக்கப்பட இருக்கின்றன. இதற்காக ஒரு திருவிழாவையே செயற்கையாக உருவாக்கி செட் போடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் ஜெயன்ட் வீல் ராட்டணம், மரணக் கிணற்றில் பைக் ஓட்டுதல் மற்றும் மிகப்பெரிய சர்ச் என ஒரு திருவிழாவில் இடம் பெறும் அனைத்து அம்சங்களும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளன. இன்று (ஜூன் 28) முதல் இங்கு படப்பிடிப்பு துவங்கியுள்ளது. வரும் ஜூலை 5ஆம் தேதி வரை இங்கே படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற இருக்கிறது. கிட்டத்தட்ட 3000 துணை நடிகர்கள் பங்கு பெற அவர்களுடன் இணைந்து சுரேஷ் இந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார்..