ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி | ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்: பிரகாஷ்ராஜ் |
சலார் படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாக வேலைகள் ஒரு பக்கம் இருந்தாலும் அடுத்ததாக ஜூனியர் என்டிஆரை வைத்து தான் இயக்கும் புதிய படத்தின் வேலைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் இயக்குனர் பிரசாந்த் நீல். அதேபோல நடிகர் ஜூனியர் என்டிஆர் பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன் உடன் இணைந்து, தான் நடித்து வந்த வார் 2 படத்தின் வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்ததாக பிரசாந்த் நீல் படத்தில் இணைய இருக்கிறார். அவருக்கும் தேவரா படத்தின் இரண்டாம் பாகத்தின் வேலைகள் இருந்தாலும் பிரசாந்த் நீல் படத்தில் தான் முதலில் கவனம் செலுத்த இருக்கிறார்.
இந்த படத்திற்கு டிராகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் பிரித்விராஜ், பிரசாந்த் நீல் பற்றி கூறும்போது இந்த படம் குறித்து சில விஷயங்களை பேச்சு வாக்கில் வெளியிட்டு விட்டார். அதாவது இந்த படத்திற்கு டிராகன் தான் டைட்டில் என்று கூறியுள்ள பிரித்விராஜ், மலையாள நடிகர் டொவினோ தாமஸும் இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிற தகவலையும் கூறியுள்ளார். ஏற்கனவே நடிகர் பிஜூமேனன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் என்கிற தகவல் மட்டும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் மூலம் முதன்முறையாக தெலுங்கு திரை உலகில் அடியெடுத்து வைக்கிறார் நடிகர் டொவினோ தாமஸ்.