ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி | ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களில் இனி நடிக்க மாட்டேன்: பிரகாஷ்ராஜ் |
பொதுவாக சோசியல் மீடியாவில் பிரபல நட்சத்திரங்கள், குறிப்பாக நடிகைகள் தான் அதிகமாக அவதூறு தாக்குதலுக்கு ஆளாவார்கள். அதை பெரும்பாலும் செய்வது ஆண்களாக தான் இருக்கும். ஆனால் ஆச்சரியமாக கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக நடிகர் பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனன் மீது ஒருவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் அவதூறு தாக்குதல் வந்திருக்கிறார் என்பதும், அவர் ஒரு இளம்பெண் என்பதும் இன்னும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அளிப்பதாக இருக்கிறது. தற்போது அந்த பெண் யார் என்பது குறித்து புகைப்பட அடையாளத்துடன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் தகவலை வெளியிட்டுள்ளார் சுப்ரியா மேனன்..
இது குறித்து சுப்ரியா கூறும்போது, “2018 முதல் என் மீது இந்த பெண் தொடர்ந்து அவதூறு தாக்குதல் நடத்தி வருகிறார். வெவ்வேறு போலியான கணக்குகளை துவங்கி இதை அவர் செய்து வந்தார். சில வருடங்களிலேயே அவரை நான் கண்டுபிடித்து விட்டாலும், இளம்பெண் என்பதால் அவரது எதிர்காலம் கருதி அமைதியாக இருந்தேன். தற்போது அவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் குழந்தையும் இருக்கிறது. நர்ஸ் ஆக வேலையும் பார்க்கிறார். இருந்தாலும் இப்போதும் என் மீதான அவரது அவதூறு தாக்குதல் நின்ற பாடில்லை” என்று கூறி அந்த பெண்ணின் சோசியல் மீடியா அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளார் சுப்ரியா மேனன். மேலும் இது குறித்து சட்டரீதியாக நடவடிக்கையும் எடுக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.