தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

கன்னட நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கும் 'கன்னட பிக்பாஸ் சீசன் 12' நிகழ்ச்சிக்கு திடீரென சிக்கல் வந்தது. அந்த நிகழ்ச்சிக்காக 5 கோடி ரூபாய் செலவு செய்து பெங்களூருவில் உள்ள ஜாலிவுட் ஸ்டுடியோவில் அரங்கம் அமைக்கப்பட்டது. அந்த ஸ்டுடியோவில் சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக கர்நாடக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சீல் வைத்தது.
இதைத் தொடர்ந்து பிக்பாஸ் போட்டியாளர்கள் அங்கிருந்து ஒரு ரிசார்ட்டுக்கு மாற்றப்பட்டார்கள். இந்த விவகாரம் கன்னடத் திரையுலகத்திலும், டிவி வட்டாரங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
தற்போது வைக்கப்பட்ட சீல்-ஐ அகற்றுமாறு கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில், “நான் பெங்களூரு தெற்கு மாவட்ட துணை ஆணையரை, பிக்பாஸ் கன்னட படப்பிடிப்பு நடைபெறும் ஜாலிவுட் வளாகத்தின் சீலை அகற்ற உத்தரவிட்டுள்ளேன்.
சுற்றுச்சூழல் இணக்கம் முதன்மை முன்னுரிமையாக இருந்தாலும், கர்நாடக மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அமைக்கப்பட்ட விதிமுறைகளின்படி மீறல்களை சரி செய்ய ஸ்டுடியோவுக்கு நேரம் வழங்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நமது பொறுப்பை உறுதிப்படுத்தியவாறு, கன்னட பொழுதுபோக்கு தொழிலை ஆதரிப்பதில் உறுதியாக இருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ளது. கர்நாடக மாநில சுற்றுச்சூழல் நலனை விட பிக்பாஸ் நிகழ்ச்சி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றா என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் சுதீப், துணை முதல்வருக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
“சரியான நேரத்தில் ஆதரவு அளித்த துணை முதல்அமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. மேலும், சமீபத்திய குழப்பங்கள் அல்லது இடையூறுகளில் 'கன்னட பிக்பாஸ்' ஈடுபடவில்லை, அல்லது பங்கு கொள்ளவில்லை என்பதை அங்கீகரித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
எனது அழைப்புக்கு உடனடியாக பதிலளித்த துணை முதல்வரை நான் உண்மையாகப் பாராட்டுகிறேன், மற்றும் அவரது அர்ப்பணிப்பு முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். 'கன்னட பிக் பாஸ் 12, இங்கேயே இருக்கும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.