மாஸ் மாஸ்டர்: புதிய பட்டத்துடன் 25வது படத்தில் பாபி சிம்ஹா | கதை சிக்கலில் மாட்டிய ஆஸ்கர் படம் | மீண்டும் கதாநாயகனாக நடிக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் | பிளாஷ்பேக் : தியாகியாக நடித்தால் மக்கள் பட்டை நாமம் போடுவார்கள் என சொன்ன சிவாஜி | பிளாஷ்பேக் : தவறான சிகிச்சையால் மரணம் அடைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 75 வயது பவுனுதாயி ஆக ராதிகா சரத்குமார்: பட ரிலீசுக்கு முன்பே வியாபாரம் ஆன 'தாய்கிழவி' | 2025 முடிவும் இப்படி.. 2026 தொடக்கமும் அப்படி.. | திருமணம் செய்யாதது ஏன்? மாஸ்டர் மகேந்திரன் | மலேசியாவில் 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழா: விஜய் குடும்பத்தினர் பங்கேற்பார்களா? | டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஒருவர், கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் ஒரு படப்பிடிப்புக்காக திருச்சூரிலிருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் 6 பேர் கொண்ட கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பலாத்கார காட்சிகளை அந்தக் கும்பல் செல்போனில் வீடியோ எடுத்தது.
நடிகை இதுகுறித்து கொச்சி போலீசில் புகார் செய்தார். நெடும்பாசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த வழக்கில் முக்கிய நபரான பல்சர் சுனில்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ், பிரதீப், சலீம், சார்லி தாமஸ், சனில்குமார் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பலாத்காரத்திற்கு பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப் தான் சதித்திட்டம் தீட்டினார் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து திலீப்பையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 85 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
முதலில் ஆலுவா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த விசாரணை பின்னர் எர்ணாகுளம் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 216 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். முதலில் நடிகைக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த பலர், பின்னர் பல்டி அடித்தனர். இந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் வருகிற டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று வழக்கை விசாரித்த நீதி மன்றம் அறிவித்துள்ளது. அன்று நடிகர் திலீப் உள்பட 9 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த வழக்கில் 8 வருடங்களுக்குப் பிறகு தற்போது தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. இதில் நடிகர் திலீபிற்கு தண்டனை கிடைக்குமா? அல்லது தண்டனையில் இருந்து தப்புவாரா என்பது குறித்து இப்போது விவாதங்கள் தொடங்கியுள்ளது.