4வது முறையாக இணையும் தனுஷ் - ஆனந்த் எல்.ராய் கூட்டணி | சல்மான்கானின் பிக்பாஸ் 20 ஓடிடி-யில் சாதனை | பிரபாஸின் ஸ்பிரிட் பற்றி அப்டேட்டை பகிர்ந்த இயக்குனர் | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மகேஷ் பாபுவின் வாரணாசி ராமர் வேடம் | நீண்ட இடைவெளிக்கு பிறகு உடற்பயிற்சிக்கு திரும்பிய ராஷ்மிகா | காலை 6 மணி காட்சிகள், சிறிய படங்களுக்கு ஆர்வம் காட்டாத தியேட்டர்கள், ரசிகர்கள் | நந்தி விருதுகள் : தேர்வுக் குழுத் தலைவராக நடிகர் பாலகிருஷ்ணா நியமனம் | தமிழ் சினிமா - சின்னத்திரை இரண்டிலும் உச்சம் தொட்ட பிரபலங்கள் | இரண்டாவது வாரத்தில் 'ஓம்', லாபத்தைத் தருமா ? | தமிழ் சினிமாவிலும் ரசிகர்களை கவர்ந்த பிற மொழி டாப் ஹீரோக்கள் |

சிரஞ்சீவியின் விஸ்வாம்பரா படம் பல ஆண்டுகளாகத் தயாரிப்பில் இருந்து வருகிறது. ஒருகட்டத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருந்த இப்படம், அதன் டீசரில் இடம்பெற்றிருந்த மோசமான கிராபிக்ஸ் காட்சிகளால் கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தது. அதன் பிறகு, படக்குழுவினர் கிராபிக்ஸ் பணிகளை மீண்டும் மேம்படுத்தி வந்தனர்.
சில மாதங்களுக்கு முன்பு, இப்படம் சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாகும் என இணையத்தில் வதந்திகள் பரவின. சிரஞ்சீவியின் மற்றொரு படமான காகா படமும் பண்டிகை வெளியீட்டிற்குத் திட்டமிடப்பட்டிருந்ததால் குழப்பம் நிலவியது. காகா படக்குழுவினர் தங்கள் படம் சங்கராந்திக்கு வெளியாகும் எனத் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இதனால் சிரஞ்சீவி ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அடுத்த மாதம்தான் இது குறித்த தெளிவான விவரம் தெரியவரும். வசிஷ்டா இயக்கியுள்ள இந்த பேண்டஸி படத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ளார். ஆஷிகா ரங்கநாத் மற்றும் குணால் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது.




