துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தமிழில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய அருவி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். கடந்த வருடம் நிவின்பாலி நடிப்பில் படவேட்டு என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதையடுத்து பிரித்விராஜ் நடிப்பில் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக உருவாக இருக்கும் 'கோல்ட் கேஸ்' (cold case) என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார் அதிதி பாலன். பிரித்விராஜ் இதில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்க, அதிதி பாலன் இதில் துணிச்சலான பத்திரிகையாளராக நடித்துள்ளார். இந்தப்படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.
இந்தப்படம் பற்றி அதிதி பாலன் கூறும்போது, “நானும், என் அம்மாவும் சேர்ந்துதான் இந்த படத்தின் ஸ்க்ரிப்ட்டையே படித்தோம். இதில் எனக்கு தனித்தன்மை வாய்ந்த துணிச்சலான பத்திரிகையாளர் கதாபாத்திரம். ஹீரோ பிரித்விராஜூக்கும், எனக்கும் சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றாலும் நாங்கள் இருவரும் அதிக காட்சிகளில் சேர்ந்து நடிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. நிவின்பாலியுடன் சேர்ந்து பணியாற்றிய அனுபவத்தை வைத்து பார்க்கும்போது, அவரை விட பிரித்விராஜ் கொஞ்சம் சீரியஸான மனிதர் தான்.. ஆனாலும் படப்பிடிப்பு துவங்கிய இரண்டாம் நாளே அவருடன் எனக்கு நல்ல புரிதல் ஏற்பட்டு விட்டது” என கூறியுள்ளார் அதிதி பாலன்.