தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
மோகன்லால், மீனா நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படமான த்ரிஷ்யத்தின் 2ம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இதிலும் மோகன்லால், மீனா நடித்துள்ளனர். ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். இந்த படத்திற்கு மக்களிடம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கொரோனா காலத்தில் இந்தப் படம் தயாரானாதால் அப்போது ஓடிடி தளத்தில் வெளியிட ஒப்பந்தம் போடப்பட்டது. இப்போது சகஜநிலை திரும்பியும் படம் ஓடிடி தளத்தில் வெளிவருவதற்கு மலையாள தியேட்டர் உரிகமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கேரள தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் விஜயகுமார் கூறியிருப்பதாவது: நடிகர்களை பெரிய அந்தஸ்துக்கு உயர்த்தியது திரையரங்குகள்தான். எனவே மோகன்லாலுக்கு மட்டுமல்ல, எல்லா நட்சத்திரங்களுக்குமே திரையரங்குகளைக் காக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருக்கிறது.
ஏனென்றால் அதிலிருந்து தான் இவர்கள் அனைத்தையும் பெற்றுள்ளனர். த்ரிஷ்யம் 2 முதலில் திரையரங்க வெளியீடாகத்தான் பதிவு செய்யப்பட்டது. திடீரென ஓடிடியில் வெளியிடுவது நியாயமானதல்ல. நாங்கள் எந்த ஒரு குறிப்பிட்ட நடிகருக்கும் எதிரி அல்ல. திரையரங்குகளின் நலனுக்காகவே பேசுகிறோம்.
பல்வேறு காரணங்களால் திரையரங்குள் இழப்பை சந்தித்து வருகிறது. அந்தத் துறையின் பணியாளர்கள் அனைவரின் வாழ்வாதாரமும் மோசமாக இருக்கிறது. இதை நட்சத்திரங்கள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். படம் நாளை அமேசான் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.