துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
காளிதாஸ் ஜெயராம் தற்போது மலையாளத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியுள்ளது. அறிமுக இயக்குனர் வினில் வர்கீஸ் என்பவர் இந்த படத்தை இயக்குகிறார். கதாநாயகிகளாக நமீதா பிரமோத் மற்றும் 'பிகில்' படத்தில் நடித்த ரெபா மோனிகா ஜான் இருவரும் நடிக்கின்றனர். ஆனால் கடந்த வருடம் மார்ச் மாதமே இந்தப்படத்தின் அறிவிப்பு வெளியாகி படத்தின் பூஜையும் நடைபெற்றது. ஆனால் கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நடைபெறவில்லை.
ஆனால் இந்த ஒரு வருடத்தில் படத்தில் பல அதிரடி மாற்றங்கள் நடந்துவிட்டன. முதலில் இந்தப்படத்தின் நாயகிகளாக அறிவிக்கப்பட்ட மியா ஜார்ஜ் மற்றும் புதுமுகம் ரியா ஆகியோர் இந்தப்படத்தில் இப்போது இல்லை.. அதேபோல இந்தப்படத்தை 3 டாட்ஸ் ஸ்டுடியோ என்கிற நிறுவனம் தான் தயாரிப்பதாக கடந்த வருடம் பூஜையெல்லாம் போட்டது. ஆனால். இப்போதோ அந்த நிறுவனம் விலகிக்கொள்ள நவரசா பிலிம்ஸ் என்கிற புதிய நிறுவனம் இந்தப்படத்தை தயாரிக்கிறது.
மியா ஜார்ஜுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அவர் இந்தப்படத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டார் என்றும், புதுமுகம் ரியாவை அறிமுகப்படுத்தி ரிஸ்க் எடுக்கவேண்டாம் என்பதால் ஓரளவு பிரபலமான நடிகைகளையே தற்போது ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.