மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக நடித்துவரும் நடிகர் மோகன்லால் தனது நீண்டநாள் கனவான டைரக்சன் துறையில் தற்போது அடியெடுத்து வைத்துள்ளார். அவர் முதன்முதலாக இயக்கும் 'பாரோஸ்' என்கிற படத்தின் துவக்க விழா பூஜை நேற்றுமுன்தினம் நடைபெற்றது. பேண்டசி படமாக உருவாகும் இந்தப்படத்தின் கதையை 'மைடியர் குட்டிச்சாத்தான்' பட இயக்குனர் ஜிஜோ பொன்னூஸ் தான் எழுதியுள்ளார். நேற்று நடைபெற்ற பூஜையில் கலந்துகொண்ட ஜிஜோ பொன்னூஸ், பத்திரிகையாளர் சந்திப்பின்போது ஒரு புதிய தகவல் ஒன்றை கூறினார்.
'இந்தப்படத்தின் கதையை தான் பல வருடங்களாக உருவாக்கினேன். இதை மோகன்லாலிடம் சொன்னபோது தானே இயக்குவதாக அவர் கூறினார். ஆனால் குழந்திகளுகான பேண்டசி கதையாக இதை நான் எழுதியிருந்தேன். மோகன்லால் முதன்முதலாக இயக்கம் படம் என்பதால் இது இளைஞர்களையும் கவரும் விதமாக இருக்க வேண்டும் என நினைத்தேன். இந்த கதையை மோகன்லாலிடம் கூறியபோதே அவரது மகள் விஸ்மாயாவும் இந்த கதையை கேட்டுவிட்டு, இளைஞர்களை கவரும் விதமாக இதில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம், என்ன விஷயங்களை புதிதாக சேர்க்கலாம் என கூறினார். அவரது ஆலோசனையையும் மனதில் வைத்து பைனல் ஸ்கிரிப்ட்டை உருவாக்கினோம்” என கூறினார்.