மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்கிற பெயரில் வெளியான 'பிங்க்' திரைப்படம் தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் ரீமேக் ஆகி வருகிறது. பவன் கல்யாண், கிட்டத்தட்ட இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு நடித்து வரும் படம் இது என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் இப்படத்தை எதிர்பார்த்து வருகின்றனர். வரும் ஏப்-9ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்திற்கான தனது டப்பிங் பணிகளை தற்போது முடித்து கொடுத்துவிட்டார் பவன் கல்யாண்.. இதுகுறித்த புகைப்படம் .ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. வேணு ஸ்ரீராம் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் ஸ்ருதிஹாசன், அஞ்சலி, நிவேதா தாமஸ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். போனி கபூர் மற்றும் தில் ராஜூ இருவரும் இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளனர்.