ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

தெலுங்கில் சீனியர் நடிகர்களில் இன்றும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக அதிரடி ஹீரோவாகவே நடித்து வருபவர் நடிகர் பாலகிருஷ்ணா. சிம்ஹா, லெஜெண்ட் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இயக்குனர் போயப்படி சீனு டைரக்சனில் நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. உகாதி திருநாளான இன்று இந்த படத்திற்கு தற்போது அகண்டா என டைட்டில் வைக்கப்பட்டு, இந்த படத்தின் ஒரு நிமிட டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த டீசரில் அகோரி கெட்டப்பில் நடித்திருக்கும் பாலகிருஷ்ணா, ரசிகர்களை ரொம்பவே ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதுமட்டுமல்ல இதே கெட்டப்பில் சிவன் கோவிலில் எதிரிகளை பந்தாடும் ஆக்சன் காட்சியும் அந்த டீசரில் இடம்பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது இந்த படத்தில் கதாநாயகியாக பிரக்யா ஜெய்ஸ்வால் நடிக்க வில்லனாக மேகா ஸ்ரீகாந்த் நடிக்கிறார்