திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
ஆந்திராவை சேர்ந்தவர் ரோகினி சிந்தூரி. கெமிக்கல் என்ஜினீயரிங் படித்த இவர் ஐஏஎஸ் தேர்வில் 43வது இடம் பிடித்து வெற்றி பெற்றார். கர்நாடக மாநிலத்தின் தும்குருவில் உதவி ஆணையராக தனது பணியை தொடங்கினார். அப்போது 42 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்த மீட்டதன் மூலம் புகழ்பெற்றார். போக்குவரத்து ஒழுங்கு படுத்தல், ஆக்கிரமிப்பு அகற்றல் என அந்த பகுதியின் ஹீரோயின் ஆனார்.
மாண்டியா மாவட்ட அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் அங்குள்ள மக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்துவது கண்டு திடுக்கிட்டார். அந்த மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் தனிப்பட்ட கழிப்பிடங்களை கட்டி முடித்தார். இந்தியாவின் 3வது சிறந்த மாவட்டமாக மாண்டியாவை மாற்றினார்.
இப்படி பல பணிகளால் மற்றவர்களுக்கு உதாரணமாக திகழ்ந்த அவரது வாழ்க்கை பாரத சிந்தூரி என்ற பெயரில் கன்னடத்தில் திரைப்படமாக தயாராகிறது. இதனை ஸ்வர்ண சந்திரா என்ற இயக்குனர் இயக்குகிறார். ரோகினி சிந்தூரி வேடத்தில் அக்ஷிதா பாண்டபுரா நடிப்பார் என்று தெரிகிறது. படத்தின் தலைப்பை கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் பதிவு செய்துள்ள இயக்குனர், ஊரடங்கு தளர்வுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவித்திருக்கிறார்.